திரு ஜமால் மொஹமத் இசாக் அவர்கள் என்னுடை இடம் மற்றும் வீட்டை தன்னுடய கடை நடத்துவதற்கு வாடகைக்கு கேட்டு ஜூலை 7, 2022  வந்தார். நானும் டோக்கன் முன் தொகை ரூ 10,000 பெற்றுக்கொண்டு அக்ரிமெண்ட் தயார் செய்து கையொப்பமும், முன் தொகையாக 7 லட்சம் கேட்டேன். அவர் சில நாட்களில் தருவதாக சொன்னார். அவருடைய பழக்க வழக்கங்கள், குடும்ப பின்னனி, என்னுடைய அண்ணனுடைய நண்பர் திரு இராமலிங்கம் அவர்களின் குடும்ப நண்பர், திரு இராமலிங்கம் அவர்களுடைய பரிந்துரை ஆகியவற்றின் பேரில் முன் தொகை தந்துவிடுவார் என்ற நம்பிக்கையின் பேரில் வேலையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் முன் தொகை 7 லட்சம் தராமயை தராமல் இழுத்தடித்து வீட்டையும் இடித்து அரை குறையாக வேறு யாருக்கும் தரமுடியாத வகையில் ஆக்கி இப்பொழுது என்னுடைய அலைபேசி அழைப்பை எடுக்காமல் இருக்கிறார். 

தேதிவாரியாக ஆறுமாதமாக அவர் தாமதப்படுத்திய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.